மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
உலக அளவில் சினிமாவில் உயர்ந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடக்கும் இந்த விழாவில் உலக நாடுகளில் இருந்து பல படங்கள் அனுப்பப்படுகின்றன. அந்தவகையில் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் குஜராத்தி படமான ‛செல்லோ ஷோ' தேர்வாகி உள்ளது.
பேன் நலின் என்பவர் இயக்கி உள்ள இந்த படம் 9வயது சிறுவனை மையமாக வைத்து உருவாகி உள்ளது. யதார்த்தமாக படமாக்கப்பட்டுள்ள இந்த படம் ஏற்கனவே சில சர்வதேச பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றது. தற்போது ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படுகிறது.
ஆஸ்கருக்கு அனுப்ப இந்தியாவின் பல மொழிகளில் இருந்து படங்கள் தேர்வாகின. குறிப்பாக ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், விவேக் அக்னி ஹோத்ரியின் காஷ்மீர் பைல்ஸ் படங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தன. இறுதியில் ‛செல்லோ ஷோ' தேர்வானது.